பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

0
49

ஒப்​பந்த தொழிலா​ளர்​களை பணி நிரந்​தரம் செய்ய கோரி, அண்​ணா​சாலை​யில் உள்ள மின்​வாரிய தலை​மையகம் அருகே தமிழ்​நாடு மின்​உற்​பத்தி மற்​றும் பகிர்​மான தொழிலா​ளர்கூட்​டமைப்​பினர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, கூட்​டமைப்​பின் மாநில தலை​வர் மகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக மின்​வாரி​யத்​தில் பல ஆண்​டு​களாக ஒப்​பந்த தொழிலா​ளி​யாக பணி​யாற்றி வரு​கிறோம். புயல், மழை, கரோ​னா, போன்ற அனைத்து பேரிடர் காலங்​களி​லும் உயிரை பொருட்​படுத்​தாமல் பாடு​பட்​டோம்.

எங்​கள் நீண்ட நாள் கோரிக்​கை​யான தினக்​கூலி அடிப்​படை​யில், ரூ.965-ஐ அரசே நேரடி ஊதி​ய​மாக வழங்கி படிப்​படி​யாக பணி நிரந்​தரம் வழங்க வேண்​டும். கடந்த மாதம் மின்​வாரிய வெள்​ளை​யறிக்கை வெளி​யிட்ட போது, ஒப்​பந்த தொழிலார்​களை அடை​யாளம் காண முடிய​வில்லை என்​றனர்.

நாங்​கள் பணிபுரி​யும் அலு​வல​கங்​களில் அரசே நேரடி​யாக களம்​கண்டு அடை​யாளம் காண​முடி​யும். இதற்கு ஒரு மணி நேரம் போது​மானது. நாங்​கள் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஒரு​மாத கால​மாக அனைத்து மாவட்​டத்​தி​லும், வேலை நிறுத்​தப் போராட்​டம் நடத்தி வரு​கிறோம்.

இதற்கு தமிழக அரசு மற்​றும் மின்​வாரிய​மும் இன்று வரை எந்த பதி​லும் அளிக்​க​வில்​லை. எனவே, எங்கள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here