உள்நாட்டுப் போருக்கு நடுவே மியான்மரில் தேர்தல்

0
10

மியான்​மரில் ஆங் சான் சூகி அரசை நீக்கிவிட்டு 2021 முதல் ராணுவப் புரட்சி மூலம் ராணுவ தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லாங் ஆட்சி புரிந்து வரு​கிறார்.

தற்போது ஆங் சான் சூகி வீட்​டு சிறை​யில் வைக்கப்​பட்டுள்​ளார் இந்நிலையில், ராணுவ ஆட்​சி​யாளர்​களுக்கு எதி​ராக உள்​நாட்​டுப் போர் நடை​பெற்று வரு​கிறது. நாட்​டின் பல பகு​தி​கள் கிளர்ச்சியாளர்​கள் கட்​டுப்​பாட்​டில்​ உள்​ளன.

இந்த சூழலில் நாடாளு​மன்ற பொதுத் தேர்​தல் 3 கட்​ட​மாக நடைபெறும் என அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி, ராணுவ அரசின் கண்​காணிப்​பின் கீழ் நேற்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்​றது. 2-ம் கட்ட தேர்​தல் ஜனவரி 11-ம் தேதி​யும், 3-ம் கட்ட தேர்​தல் ஜனவரி 25-ம் தேதி​யும் நடை​பெற உள்​ளன. ஜனவரி இறுதி அல்​லது பிப்ரவரி முதல் வாரத்​தில் தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​படும்.

இதனிடையே, இந்த தேர்​தல் ஒரு ஏமாற்று வேலை என ஐ.நா. சபையும் மேற்​கத்​திய நாடு​களும் குற்​றம்​சாட்டி உள்​ளன. குறிப்பாக ராணுவ ஆட்​சியை ஜனநாயக ஆட்​சி​யாக மாற்றுவதற்காக இந்​தத் தேர்​தல் நடத்​தப் ​படு​வ​தாக​வும் ராணுவத் தளபதி மின் ஆங் அதிப​ரா​வார் என்​றும் கூறப்​படு​கிறது.

இந்​தத் தேர்​தலுக்கு சீனா ஆதரவு தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா, சீனா, ரஷ்யா, வியட்​நாம் ஆகிய நாடு​கள் தேர்​தல் பார்​வையாளர்​களை அனுப்பி உள்​ள​தாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here