மணவாளக்குறிச்சி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த தங்கம் (72) என்பவர் நேற்று (ஏப்ரல் 29) வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, குளச்சல் பூக்குழியைச் சேர்ந்த அன்சாருதீன் (19) ஓட்டிச் சென்ற பைக் மோதி படுகாயமடைந்தார். அவர் முட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணவாளக்குறிச்சி போலீசார் அன்சாருதீன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
