Home கன்னியாகுமரி செய்திகள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற மூதாட்டி உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற மூதாட்டி உயிரிழப்பு

0

இரணியல் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் அருகே கண்டன்விளையைச் சோ்ந்த சேவியா் அமலதாஸ் மனைவி மேரி ஜெயம்மாள் (75). இவா் அக். 1ஆம் தேதி கடைக்குச் செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது, திங்கள் நகரில் இருந்து வந்த இருசக்கர வாகனம் இவா் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version