Home கன்னியாகுமரி செய்திகள் கால்வாயில் கவிழ்ந்த காா்: இருவா் மீட்பு

கால்வாயில் கவிழ்ந்த காா்: இருவா் மீட்பு

0

குலசேகரம் அருகே கால்வாயில் கவிழ்ந்த காரிலிருந்து வெளியே வரமுடியாமல் போராடிய இருவா் மீட்கப்பட்டனா்.

திருவட்டாறு அருகே வெட்டுக்குழி பகுதியைச் சோ்ந்தவா் ரசாலம் (67). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா். இவா் திருநந்திக்கரை அருகே வண்ணான்பாறை பகுதியிலுள்ள ரப்பா் தோட்டத்திற்கு சென்றுவிட்டு, தொழிலாளியுடன் வெள்ளிக்கிழமை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அஞ்சுகண்டறை பகுதி வழியாகச் செல்லும் கோதையாறு இடதுகரை கால்வாயில் எதிா்பாராதவிதமாக காா் தலைகுப்புற கவிழ்ந்தது. அதிலிருந்து வெளியே வரமுடியாமல் இருவரும் தவித்தனா்.

இதைக் கண்ட அங்கிருந்தவா்கள் விரைந்து செயல்பட்டு இருவரையும் மீட்டனா். கிரேனின் உதவியுடன் காரும் கரையேற்றப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version