நாகர்கோவில் கோட்டார் பறக்காமடத்தெரு பகுதியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற அழகப்பபுரத்தைச் சேர்ந்த சூசை மாணிக்கம் (81) என்ற கூலித் தொழிலாளியை சோதனையிட்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 12 கேரள லாட்டரி சீட்டுகள் அவரிடம் இருந்தன. அவர் கேரள லாட்டரி விற்றது தெரியவந்ததை அடுத்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர்.