Home உலக செய்திகள் திபெத் எல்​லைப் பகு​தி​யில் நிலநடுக்கம்: நேபாளத்தில் உயிரிப்பு 1,252 ஆக அதிகரித்த நிலையில் அச்சம்

திபெத் எல்​லைப் பகு​தி​யில் நிலநடுக்கம்: நேபாளத்தில் உயிரிப்பு 1,252 ஆக அதிகரித்த நிலையில் அச்சம்

0

நேபாளத்தை உலுக்​கிய பேரழிவு வெள்​ளப் பேரிடரில் இது​வரை 1,200-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்ள நிலை​யில், அந்த சோகம் மறை​யும் முன்பே திபெத் பகு​தி​யில் நிலநடுக்​கம் ஏற்​பட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திபெத்​-நே​பாள எல்​லை​யில் உள்ள இமயமலை​யின் லாங்டாங்லிருங் பனிச்​சிகரத்​தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்​மாண்ட பனிமலை கடந்த மாதம் 26-ம் தேதி உடைந்​தது. இதன் விளை​வாக நேபாளத்​தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்​தது.

பாறை​கள், மண், சேறு சகதி​யுடன் சீறிப்​பாய்ந்து வந்த வெள்​ளம் வீடு​கள், சாலைகள், பாலங்​கள், நீர்​மின் திட்​டங்​கள் என வழி​யில் இருந்த அனைத்தையும் வாரி சுருட்டி சென்​றது. ரசு​வா, நுவாகோட், தாதிங் ஆகிய மாவட்​டங்​களை இந்த பெரு​வெள்​ளம் புரட்டிப்போட்டது.

இதனிடையே, நேபாளத்​தில் நேற்று 9-வது நாளாக மீட்பு மற்​றும் தேடு​தல் பணி​கள் தொடர்ந்த நிலை​யில், பெரு​வெள்​ளத்​தில் உயிரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 1,252 ஆக உயர்ந்​தது. அதே வேளை​யில் 4,216 பேரைக் காண​வில்​லை. இவர்​களில் வெளிநாட்டினரும் அடங்​கு​வர். அவர்​களில் பெரும்​பாலானோர் இந்​தி​யர்​கள் ஆவர். வெளி​நாட்டு மீட்​புக்​குழுக்​களின்​ உதவியோடு மாய​மானவர்​களை தேடும்​ பணி முழு​வீச்​சில் நடந்து வருகிறது.

நேபாள காவல்​துறை​யின்​படி, சித்​வானில் 355, கிழக்கு நவல்பராசியில் 218, மேற்கு நவல்​ப​ராசி​யில் 208 (18 உடல்​கள் இந்தி​யா​வில் மீட்​கப்​பட்​ட​வை), நுவாகோட்​டில் 177, ரசு​வா​வில் 127, கோர்க்​கா​வில் 69, தாதிங்​கில் 60, தனாஹு​வில் 38 உடல்​கள் மீட்கப்​பட்​டுள்​ளன. எல்​லை​யின் சீனப் பகு​தி​யான கியிரோங்​கில் 21 பேர் உயிரிழந்​துள்​ளதுடன் 541 பேர் மாய​மாகி​யுள்​ளனர்.

நேபாள ராணுவத்​தின் மீட்​புப் பணி​கள் 9-வது நாளாக நீடிக்​கிறது. ரசு​வா, நுவாகோட் பள்​ளத்​தாக்​கு​களின் அடை​யாளங்​கள் அழிந்து புவி​யியல் அமைப்பே மாறிய​தால், ஹெலி​காப்​டர் விமானிகள் தங்கள் சொந்த அனுபவத்​தை​யும் சாதுர்​யத்​தை​யும் நம்​பியே பறக்​கின்​றனர். போடேகோசி, திரிசூலி ஆறுகளில் நீர்​மட்​டம் உயர்ந்து வரு​வ​தால் காத்​மாண்​டு, சித்​வான், கோர்க்​கா, முஸ்​தாங் உள்​ளிட்ட 19 மாவட்​டங்​களில் மித​மான வெள்ள அபா​யம் எச்சரிக்கப்​பட்​டுள்​ளது.

இந்த நிலை​யில், நேற்று மதி​யம் 1.46 மணிக்கு நேபாள-உத்​த​ராகண்ட் எல்​லைக்கு அரு​கிலுள்ள திபெத் பகு​தி​யில் 14 கி.மீ ஆழத்தில் 5.0 ரிக்​டர் அளவில் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் சேதங்​கள் எது​வும் பதி​வாக​வில்லை என்​றாலும், ஏற்​கெனவே வெள்​ளத்​தால் பா​திக்​கப்​பட்ட மக்​களிடையே இது மேலும்​ அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

91 வயது மூதாட்டி உயிர் பிழைத்​தது எப்​படி?

நுவாகோட்​டில் உள்ள தேவி​காட் என்ற ஆற்​றங்​கரை நகரத்​தில் இருந்த முதி​யோர் பராமரிப்பு இல்​லத்தை பெரு​வெள்​ளம் தாக்கியது. வெள்​ளம் வரு​வதை அறிந்து ஒரு சிலர் உயர​மான பகுதிக்கு சென்று உயிர் தப்​பினர். அதே நேரத்​தில் 7 முதி​ய​வர்​கள் வெள்​ளத்​தில் சிக்கி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இதனிடையே, முதி​யோர் பாரமரிப்பு இல்​லத்​தில் மீட்பு பணி​யில் ஈடு​பட்ட உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் அங்கு இடி​பாடு​களுக்​குள் சிக்கி​யிருந்த 91 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டியை போராடி மீட்​டனர். மீட்​கப்​பட்ட குணா மாயா போஹரா சேறு படிந்த நிலை​யில் ஜேசிபி இயந்​திரத்​தில் அமர்ந்திருந்த புகைப்​படம் இணை​யத்​தில் வைரலானதுடன், பெரும் துயரிலும் போராடி உயிர் பிழைப்​ப​தற்​கான நம்பிக்கையின் முக​மாக அவர் மாறி​னார்.

அவர் உள்பட முதி​யோர் பராமரிப்பு இலத்​தில் உயிர் தப்​பிய முதிய​வர்​கள் அனை​வரும் ஹெலி​காப்​டர் மூலம் காத்​மாண்டு அழைத்து செல்​லப்​பட்​டு, அங்​குள்ள ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்​டுள்​ளனர். பெருவெள்ளத்திலிருந்து உயிர் தப்பிய குணா மாயா போஹரா செய்தியாளர்களிடம் பேசுகை​யில்​, “வெள்​ளம் வந்​த​போது நான் தரைத்​தளத்​தில் உள்ள எனது அறையில் இருந்​தேன்.

ஏற்​கெனவே எனக்கு கால்​களில் ஊனம் இருக்​கும் நிலை​யில், வெள்​ளப் பெருக்​கி​னால் கைகளில் காயம் ஏற்​பட்​டது. ஆனாலும் உயிர் வாழ வேண்​டும் என்ற மன உறு​தி​யுடன் மரணத்தை எதிர்த்து போராடினேன். அறை​யின் ஜன்​னலைத் திறந்​து, எனது தலையை நீர் மட்​டத்​திற்கு மேலே வெளியே வைத்​தேன். 2-3 மணி நேரத்​திற்கு தலையை தண்​ணீருக்கு மேலே நீட்​டிய​வாறே இருந்​தேன். உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் வந்து என்னை மீட்​டனர்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version