Home சினிமா செய்திகள் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான்

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான்

0

நிவின் பாலி, சூரி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கேரளாவில் துல்கர் சல்மான் வெளியிட இருப்பதாக நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இந்தப் படம் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை கேரளாவில் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இந்தத் தகவலை படத்தின் நாயகன் நிவின் பாலி தனது சமூகவலை தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர்  வெளியிட்டுள்ள பதிவில், ‘இது எனக்கு சிறப்பான ஒன்று. ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை என் பிரியத்துக்குரிய துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் வாங்கி கேரளாவில் வெளியிடுகிறது. இந்தப் பயணத்தில் அவர்களும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள, ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராம் இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி  திரைக்கு வர இருக்கிறது. 

நிவின் பாலியும் துல்கர் சல்மானும் ‘விக்கிரமாதித்யன்’ மற்றும் ‘பெங்களூரு டேஸ்’ ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version