Home சினிமா செய்திகள் இளையராஜாவை கவுரவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்!

இளையராஜாவை கவுரவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்!

0

திரைத் துறையில் 50 ஆண்டு கால சாதனைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிட்டு இளையராஜாவை கவுரவித்துள்ளது ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்.

இதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து பேசும் காணொலியை இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ‘எனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டின் மூலம் நினைவுகூரச் செய்ததற்கு விக்டோரியன் அரசாங்கத்தின் நிதியமைச்சர் என்வர் எர்டோகன் எம்பி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டது மனதினைத் தொடுவதாக உள்ளது.

இந்த நேரத்தில் என்னுடைய இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்ற மக்கள், என்னுடன் இணைந்து பயணித்த கலைஞர்கள், என் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கும் அனைத்து தலைமுறையினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தனது இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் இளையராஜா இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 26-ம் தேதி சிட்னியிலும், அக்டோபர் 5-ம் தேதி பிரிஸ்பேனிலும் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். 

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்​கர் விருதுகளுக்​கான போட்​டி​யில், சிறந்த வெளி​நாட்​டுப் பட பிரி​வில் பங்​கேற்க இந்​தியா சார்​பில் ‘கோந்​தல்’ தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்தப் படத்துக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version