Home சினிமா செய்திகள் புத்தாண்டு தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் ‘பைரவா’

புத்தாண்டு தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் ‘பைரவா’

0

தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 2027-ஆம் ஆண்டு புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பாரதி ரெட்டி ஆகியோர் தயாரித்த இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்துக்குப் பிறகு விஜய் மற்றும் பரதன் கூட்டணியில் உருவான இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இப்படம் அப்போது கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், 2027 புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தைத் தமிழ்நாடு முழுவதும் சிம் சினி இன்டர்நேஷனல் நிறுவனம் மறுவெளியீடு செய்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version