துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மத்திய மண்டலம் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிழக்கு மண்டலம் அணி.
பெங்களூருவில் நடைபெற்று வந்த அரை இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டலம் அணி 266 ரன்களும், கிழக்கு மண்டலம் 266 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய மத்திய மண்டலம் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 50.2 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக அமன் மோஹதே 41, அர்ஷத் கான் 25, ஹர்ஷ் துபே 24 ரன்கள் சேர்த்தனர். கிழக்கு மண்டலம் அணி தரப்பில் முகேஷ் குமார் 4, முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 159 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி 39.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷி 43 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களும், கேப்டன் இஷான் கிஷன் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் விளாசினர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிழக்கு மண்டலம் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வரும் 6-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் அணியானது தென் மண்டலம் அல்லது வடக்கு மண்டல அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். துலீப் டிராபி தொடரில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி.
