Home விளையாட்டு செய்திகள் நியூஸி. செல்லும் இந்தியா ‘ஏ’ அணி

நியூஸி. செல்லும் இந்தியா ‘ஏ’ அணி

0

இந்திய அணி வரும் அக்டோபர் மாதம் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் டெஸ்ட் தொடர் நவம்பர் 19-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. இந்த தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முக்கிய அங்கமாக உள்ளது. இதனால் இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா ‘ஏ’ அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 4 நாட்கள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் அக்டோபர் 4-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் மோதுகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version