Home மாநில செய்திகள் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்: திருமாவளவனுக்கு கொமதேக ஈஸ்வரன் வேண்டுகோள்

திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்: திருமாவளவனுக்கு கொமதேக ஈஸ்வரன் வேண்டுகோள்

0

திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை விசிக தலைவர் திருமாவளவன் தவிர்க்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிய தாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமீபத்திய செயல்பாடுகள், திமுக கூட்டணி யில் குழப்பம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை திருமாவளவன் தவிர்க்க வேண்டும்.

திமுக கூட்டணியின் வெற்றிக்காக, மாவட்டம் வாரியாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நம்முடைய செயல்பாடுகள் கூட்டணியை பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது. எனவே, குழப்பம் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை திருமாவளவன் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version