Home மாநில செய்திகள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,236 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,236 கனஅடியாக அதிகரிப்பு

0

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,236 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, ஒகேனக்கல்லில் 6,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,024 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,236 கனஅடியாக அதிகரித்தது.அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 106.11 அடியாகவும், நீர் இருப்பு 72.98 டிஎம்சியாகவும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 11-ம் தேதி முதல் நேற்று முன்தினம் மாலை வரை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 6,500 கனஅடியாக பதிவானது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version