கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கருங்கல் அருகே பாலூர் ரவுண்டானாவில் இன்று காலை கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய பொருளாளர் தங்கதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனுலால் டோம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் இதில் கலந்துகொண்டு கலைஞரை நினைவுகூர்ந்தனர்.














