ஆப்கானிஸ்தான் மீது நேரடி போர்: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவிப்பு

0
18

பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இரு நாடு​களும் எல்​லை​யில் மாறி மாறி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதனால் ஆப்​கானிஸ்​தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்​தான் அமைச்​சர் அறி​வித்​துள்​ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஆப்​கானிஸ்​தான் அரசை தலி​பான்​கள் கைப்​பற்​றினர். அப்​போது முதலே பாகிஸ்​தான் – ஆப்​கானிஸ்​தான் இடையே மோதல் நடை​பெறுகிறது. பாகிஸ்​தானில் நடை​பெற்ற சில தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு தலி​பான்​கள்​தான் காரணம் என்று பாகிஸ்​தான் குற்​றம் சாட்​டியது. அதற்கு பதிலடியாக ஆப்​கன் எல்​லை​யில் பாகிஸ்​தான் அவ்​வப்​போது தாக்​குதல் நடத்​தி​யது.

இந்​நிலை​யில் தற்​போது கடந்த ஒரு வார​மாக இரு தரப்​பின் எல்​லை​யில் பயங்கர மோதல் நடை​பெற்று வரு​கிறது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை முதல் இருதரப்​பும் தாக்​குதலில் ஈடு​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், ஆப்​க​னின் காபூல், காந்​த​கார், பக் ஷியா உட்பட பல நகரங்​கள் மீது பாகிஸ்​தான் நேற்​று​முன்​தினம் இரவு வான்​வழி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 274 தலிபான்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.

இதற்கு பதிலடி​யாக ஆப்​கன் ராணுவம் பாகிஸ்​தான் எல்​லைப் பகு​தி​களில் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பாகிஸ்​தான் வீரர்​கள் 55 பேர் கொல்​லப்​பட்​ட​தாக​வும், அந்த நாட்​டின் பல்​வேறு ராணுவ நிலைகள் தங்​கள் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளது என்​றும் தலி​பான்​கள் அறி​வித்​துள்​ளனர். கடந்த வாரம் ஆப்​க​னின் நங்​கர்​ஹார், பக்​திகா ஆகிய மாகாணங்​களில் பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பெண்​கள் உட்பட 13 பேர் இறந்​தனர்.

இதுகுறித்து பாகிஸ்​தான் பாது​காப்​புத் துறை அமைச்​சர் கவாஜா ஆசிப் கூறுகை​யில், ‘‘எங்​கள் பொறுமை எல்லை கடந்து விட்​டது. இப்​போது ஆப்​கானிஸ்​தான் மீது பகிரங்க போர் என்ற நிலைக்கு வந்​து​விட்​டது. இந்​தி​யா​வுடன் கைகோத்​துக் கொண்டு பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆப்​கன் தலி​பான்​கள் செயல்​படு​கின்​றனர். உலகில் உள்ள தீவிர​வா​தி​களை எல்​லாம் ஆப்​க​னில் சேர்த்​து, தற்​போது தீவிர​வா​தி​களை ஏற்​றுமதி செய்​கிறார்​கள். நாங்​கள் ஆப்​கானிஸ்​தானின் அண்டை நாடாக இருக்​கிறோம். எங்​களுக்கு அவர்​களைப் பற்றி நன்கு தெரி​யும். இனிமேல் அந்​நாட்​டின் மீது பகிரங்க போர்​தான் நடத்​தப்​படும்’’ என்று கூறி​னார். இதனால் இரு​நாட்டு எல்​லை​யில் பெரும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஆப்​கனை தலி​பான்​கள் கைப்​பற்​றிய போது, அதை அப்​போதைய பாகிஸ்​தான் பிரதமர் இம்​ரான் கான் வரவேற்​றார். ஆனால், அதன்​பின் இரு நாடு​களுக்​கும் இடை​யில் மோதல் அதி​கரித்​தது. தற்​போதைய மோதலுக்கு தலி​பான்​களின் தெஹ்ரிக் இ தலி​பான் பாகிஸ்​தான் என்ற அமைப்​பு​தான் காரணம், அத்​துடன் பலுசிஸ்​தானில் தனி நாடு கோரி போராடு​பவர்​களுக்கு ஆப்​கன் அடைக்​கலம் கொடுக்​கிறது என்று பாகிஸ்​தான் குற்​றம் சாட்​டி​யுள்​ளது. இந்த குற்​றச்​சாட்டை தலி​பான்​கள் தொடர்ந்து மறுத்து வரு​கின்​றனர்.

எனினும், பாகிஸ்​தானில் கடந்த 2024-ம் ஆண்டு முதல் நடந்த பல தீவிர​வாத தாக்​குதல்​களில் தலி​பான்​களுக்கு தொடர்​புள்​ளது. அதற்​கான ஆதா​ரங்​கள் உள்​ளன. குறிப்​பாக ராணுவம் மற்​றும் போலீ​ஸார் மீது தலி​பான்​கள் தாக்​குதல் நடத்தி உள்​ளனர். கடந்த 2012-ம் ஆண்டு ஸ்வாத் பள்​ளத்​தாக்​கில் மலாலா மீது தாக்​குதல் நடத்​தி​யதும்​ தெஹ்ரிக்​ இ தலி​பான்​ பாகிஸ்​தான்​ அமைப்​பு​தான்​ என்​று ​பாகிஸ்​தான்​ குற்​றம்​ ​சாட்​டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here