திற்பரப்பு அருகே குழிவட்டத்து விளையை சேர்ந்தவர் ரதீஷ் (28). கொத்தனார். நேற்று பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது குலசேகரம் பகுதியில் மற்றொரு பைக்கில் சென்ற சேகர், விஷ்ணு ஆகியோர் அந்த வழியாக சென்ற சொகுசு கார் மீது உரசியதில் இரண்டு பேரும் பைக்கில் இருந்து விழுந்துள்ளனர். இதை பார்த்த ரதீஷ் விழுந்து கிடந்த இரண்டு பேரையும் தூக்கி விட்டு காரில் இப்படி ஏன் உரசுவது போல் வந்தீர்கள் என்று கேட்டபோது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சேகர் ரப்பர் பால் வெட்டும் கத்தியால் ரதீஷை குத்தியுள்ளார். விஷ்ணு கைகளால் தாக்கியுள்ளார். உடனே ரதீஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் இன்று (25-ம் தேதி) வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சேகர், விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனர்.














