பரசேரி – புதுக்கடை சாலை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, திக்கணங்கோடு சந்திப்பில் உள்ள கால்வாய் பாலம் சீரமைக்க ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பழைய பாலம் உடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இந்தப் பாலப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ராட்சத கிரேன்கள் உதவியுடன் ரெடிமேடு கான்கிரீட் கட்டைகள் அமைக்கப்படுகின்றன. அதிகாரிகள் தரப்பில், 7 நாட்களில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.