Home மாநில செய்திகள் தெருநாய் தத்தெடுப்பை ஊக்குவிக்க டிஜிட்டல் தளம்: கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி அறிவிப்பு

தெருநாய் தத்தெடுப்பை ஊக்குவிக்க டிஜிட்டல் தளம்: கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி அறிவிப்பு

0

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று கால்​நடை பராமரிப்​புத்​துறை தொடர்​பான அறி​விப்​பு​களை வெளி​யிட்டு அமைச்​சர் கமலி பேசி​ய​தாவது: செட்​டி​நாடு, நடு​வூர், சின்​ன​சேலம் அரசுப் பண்​ணை​களில் முயல் வளர்ப்பு பிரிவு​கள் நிறு​வப்​பட்டு புறக்​கடை முயல் வளர்ப்பை ஊக்​குவிக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

பொருளா​தார ரீதி​யில் பின்​தங்​கிய​வர்​களின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்த ரூ.70 லட்​சம் செல​வில் பன்றி வளர்ப்பு பண்​ணை​கள் அமைக்​கப்​படு்ம். கோழிப்​பண்​ணை​களுக்கு நோயை கண்​டறிதல் தொடர் கண்​காணிப்​பு அவசி​யம் என்​பதால் திருப்​பூர் மாவட்​டம் பல்​லடத்​தில் ரூ.30 கோடி செல​வில் உயி​ரியல் பாது​காப்பு ஆய்​வகம் (கிரேடு-2) அமைக்​கப்​படும்.

திருச்சி மாவட்​டம் மணப்​பாறை​யில் ரூ.34 கோடி செல​வில் தினசரி 30 மெட்​ரிக் டன் உற்​பத்தி திறன் கொண்ட நவீன ஒருங்​கிணைந்த இறைச்சி பதப்​படுத்​தும் ஆலை அமைக்​கப்படும்.

சிவகங்கை மாவட்​டம் செட்​டி​நாட்​டில் அமைந்​துள்ள மாவட்ட கால்​நடை பண்​ணை​யில் கிடேரி வளர்ப்பு மையம் ஏற்​படுத்​தப்​படும். தெரு​வில் உள்ள நாய்​களை தத்​தெடுக்​கும் வகை​யில் தமிழ்​நாடு விலங்​கு​கள் நல வாரி​யம் மூலம் டிஜிட்​டல் தளம் உரு​வாக்​கப்​படும்.

தெரு​நாய்​களை தத்​தெடுப்​பது ஊக்​குவிக்​கப்​படும். திருநெல்​வேலி அபிஷேகப்​பட்​டி​யில் உள்ள மாவட்ட கால்​நடை பண்​ணை​யில் ரூ.71 லட்​சம் செல​வில் பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்​கப்​படும்.

நீல​கிரி​யில் உள்ள மாவட்ட கால்​நடை பண்​ணை​யில் ரூ.6.60 கோடி செல​வில் பாலினம் பிரிக்​கப்​பட்ட உறை​விந்து உற்​பத்தி செய்​யப்​படும். கால்​நடை பராமரிப்​புத்​துறை​யில் காலி​யாக​உள்ள பணி​யிடங்​களை நிரப்ப நடவடிக்கை எடுக்​கப்​படும்.

ரூ.110 கோடி​யில் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்​டம் இந்​தாண்டு முதல் செயல்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. பால் உற்​பத்​தியை பெருக்​க​வும், கிராமப்​புற பெண்​கள் நிலை​யான வரு​மானம் ஈட்​ட​வும் 10 ஆயிரம் பயனாளி​களுக்கு விலை​யில்லா கறவை மாடு​கள் வழங்​கப்​படும்.

கால்​நடை காப்​போம் என்ற புதிய காப்​பீடு திட்​டம் இந்​தாண்டு முதல் செயல்​படுத்​தப்​படும். வீடு​களுக்கே சென்று கால்​நடைகளுக்கு மருத்​து​வம் பார்க்க 143 புதிய நடமாடும் கால்​நடை மருத்​து​வ​மனை தொடங்​கப்​படும். இவ்​வாறு அமைச்​சர் கமலி தெரி​வித்​தா​ர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version