ரிஷப் பந்​துக்கு பதில் துருவ் ஜூரெல்

0
16

இந்​தியா – நியூஸிலாந்து அணி​கள் இடையிலான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடர் நடைபெற்று வரு​கிறது. வதோத​ரா​வில் நடை​பெற்ற முதல் போட்டியையொட்டி இந்​திய அணி​யின் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த் தீவிர வலை பயிற்​சி​யில் ஈடு​பட்​டார்.

அப்​போது அவர், வயிற்று பகு​தி​யின் பக்​க​வாட்​டில் அசவுகரி​யத்தை உணர்ந்​தார். இதையடுத்து அவருக்கு எம்​ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்​யப்​பட்​டது. இதுதொடர்பாக பிசிசிஐ மருத்​து​வக்​குழு, நிபுணருடன் ஆலோ​சனை நடத்தியது. இதில் ரிஷப் பந்த், தசை வலியால் பாதிக்​கப்பட்​டிருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து அவர், நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் இருந்து விலகி உள்ளார். ரிஷப் பந்துக்கு பதிலாக இந்​திய அணி​யில் துருவ் ஜூரெல் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் தேர்வுக்கு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here