தேவிகோடு பகுதியைச் சேர்ந்த அபீஸ் (32) என்பவர் தனது தோட்டத்தில் நட்டிருந்த சந்தன மரத்தை மர்ம நபர் ஒருவர் வெட்டி கடத்திச் சென்றார். இது குறித்து அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், உதயமார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவரை நேற்று (7-ம் தேதி) கைது செய்து, அவரிடமிருந்து 7 கிலோ சந்தனக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.














