பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தேங்காப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலங்காரக் கற்கள் அமைக்க ரூ. 1.60 லட்சமும், ஜின்னா திடலில் ரூ. 2.80 லட்சமும், தேங்காப்பட்டணம் பழைய பள்ளிக்கூடச் சாலையில் அலங்காரக் கற்கள் அமைக்க ரூ. 3.15 லட்சமும், பண்டாரவிளை சாலை காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 3 லட்சமும் என மொத்தம் 10.55 லட்சம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.