Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் ரூ. 24 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

நாகர்கோவிலில் ரூ. 24 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட வஞ்சி மார்த்தாண்டன் புதுத்தெருவில் ரூ. 7 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 13-வது வார்டுக்குட்பட்ட ராமவர்மன் புதுத்தெருவில் ரூ. 5.66 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை நேற்று மாநகர மேயர் மகேஷ் நேரில் சென்று தொடங்கி வைத்தார். 

இதையடுத்து 12-வது வார்டுக்குட்பட்ட வணிகர் தெருவில் ரூ. 6.55 லட்சத்திலும், 25-வது வார்டுக்குட்பட்ட மீனாட்சி கார்டன் அழகம்மாள் கோவில் காலனி பகுதியில் ரூ. 5 லட்சத்திலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இவ்வாறு மொத்தம் ரூ. 24.21 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவஹர், அகஸ்டினா கோகிலவாணி, உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவிப் பொறியாளர் ராஜசீலன், இளநிலை பொறியாளர்கள் செல்வன் ஜார்ஜ், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version