Home கன்னியாகுமரி செய்திகள் கோட்டாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோட்டாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்றுமுன்தினம் கம்பளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 42), துவரங்காட்டை சேர்ந்த பிரதீப் (21), பால்குளம் பகுதியை சேர்ந்த அனு (19), பட்டகசாலியன்விளையை சேர்ந்த அபினாஷ் (19) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தங்கராஜ் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version