இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 15 வெளிநாட்டினரை நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: டெல்லியில் மோகன் கார்டன், உத்தம் நகர் பகுதிகளில் போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் விசா காலத்துக்கு பிறகும் இந்தியாவில் தங்கியிருந்த 15 வெளிநாட்டினர் சிக்கினர்.
இவர்களில் 12 பேர் நைஜீரியாவையும் இருவர் வங்கதேசத்தையும் ஒருவர் ஐவரி கோஸ்ட் நாட்டையும் சேர்ந்தவர்கள்.
சரிபார்ப்புக்கு பிறகு இவர்களை நாடு கடத்த வெளிநாட்டினருக்கான பிராந்திய பதிவு அதிகாரி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் நாடு கடத்தப்படுவதற்காக தடுப்புக் காவல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.