Home சினிமா செய்திகள் சிலம்பரசன் வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ ட்ரெய்லர்

சிலம்பரசன் வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ ட்ரெய்லர்

0

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிலம்பரசன் டிஆர் வெளியிட்டுள்ளார். நானி இயக்கத்தில், அமுதா லியோனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 23 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அம்மா – மகன் பாசத்துடன் தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் எதிர்பாராமல் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அவன் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பதை இப்படம் பேசுகிறது. குடும்ப உணர்வுகள், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான திரைப்படமாக இது இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version