நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி | ஐபிஎல் ஏலம்

0
231

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

33 வயதான நடராஜன், கடந்த 2017 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். முதல் சீசனை பஞ்சாப் கிங்ஸ் (அப்போது ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’) அணிக்காக விளையாடினார். 2018 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார். யார்க்கர்கள் வீசுவதில் வல்லவர்.

மெகா ஏலத்துக்கு முன்னதாக அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்தது. 61 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. இந்நிலையில், அவரை ஏலத்தில் வாங்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் வாங்க முன்வந்தன. இறுதியில் ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here