கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 50, 51, 52 வார்டுகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி அருகில் தோண்டப்பட்ட குழி முழுமையாக மூடப்படாமல் விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் பொது மக்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.














