Home மாநில செய்திகள் கோட்டூர்புரத்தில் தெரு நாய் கடித்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

கோட்டூர்புரத்தில் தெரு நாய் கடித்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

0

சென்​னை, கோட்​டூர்​புரம், சித்ரா நகரைச் சேர்ந்​தவர் முரு​கன் (45). கூலி தொழிலா​ளி​யான இவர் மது பழக்​கத்​திற்கு அடிமை​யாகி உள்ளார்.

இந்​நிலை​யில், கடந்த 11-ம் தேதி டாஸ்​மாக் கடைக்கு மது வாங்​கச் சென்​ற​போது,தெரு நாய் ஒன்று முரு​க​னின் காலில் கடித்​துள்​ளது. இதில் காயம் ஏற்​பட்​ட​போதும், உடனடி​யாக மருத்​து​வ​மனைக்​குச் சென்று சிகிச்சை பெற​வில்​லை.

இதையடுத்​து, உறவினர்​கள் தொடர்ந்து அறி​வுறுத்​தி​யதன் பேரில், சம்​பவம் நடந்த 2 நாட்​கள் கழித்து 14-ம் தேதி சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு சென்​று, நாய் கடிக்கு முதலுதவி சிகிச்சை பெற்​றார்.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை முரு​க​னுக்கு திடீரென வலிப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து, குடும்​பத்​தினர் அவரை ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்​து​வர்​கள், முரு​கன் ஏற்​க​னவே இறந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர். இதுகுறித்து, முருகனின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version