Home மாநில செய்திகள் அமோனியா கசிவு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

அமோனியா கசிவு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

0

திரு​வள்​ளூர் மாவட்​டம்,பெரிய​பாளை​யம் அடுத்த கன்​னிகைப்​பேரில் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வந்தது.

இந்த ஆலை​யில் அமோனியா வாயு கசிந்து தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் குறித்​து, ‘தி இந்​து’ நாளிதழில் வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில், தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தலை​வர் நீதிபதி பிர​காஷ் ஸ்ரீவாஸ்​தவா தலை​மையி​லான அமர்வு தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கை விசா​ரித்​தது.

இது தொடர்​பாக, பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், இந்த ஆலை​யில் தொழிற்​சாலை பாது​காப்பு விதி​கள், அபாய ஒலி எழுப்​பும் ஏற்​பாடு, தீத்​தடுப்பு கருவி​கள் உள்​ளிட்​டவை இல்​லாமல் பல்​வேறு விதி மீறல்​கள் இருப்​ப​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக மத்​திய, மாநில மாசுக் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் உறுப்​பினர் செயலர், சுற்​றுச்​சூழல், வனம் மற்​றும் காலநிலை மாற்ற அமைச்​சகத்​தின் ஒருங்​கிணைந்த மண்டல அலு​வல​கத்​தின் பிராந்​திய அதி​காரி, திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் ஆகியோர் அடுத்த விசா​ரணை தேதிக்கு முன்​ன​தாக ஒரு வாரத்​துக்​குள் பதில் அளிக்க வேண்​டும்.

இந்த வழக்கு தொடர்​பான அடுத்​தகட்ட விசா​ரணை சென்​னை​யில் உள்ள தென்​மண்டல அமர்​வில் ஆக.31-ம் தேதி நடை​பெறும் என உத்​தர​விட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version