Home மாநில செய்திகள் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் மரியாதை

காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் மரியாதை

0

முன்னாள் முதல்வர் காம​ராஜரின் 124-வது பிறந்​த​நாள்விழா நேற்று தமிழகம் முழு​வதும் எழுச்​சி​யுடன் கொண்​டாடப்​பட்​டது. இதனையொட்​டி, முதல்​வர் விஜய் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் காமராஜர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.

தமிழக அரசு சார்​பில், சென்னை அண்ணா சாலை​யில் பல்​ல​வன் இல்​லம் எதிரே அமைந்​துள்ள காம​ராஜர் சிலை​யின் கீழ் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது திரு​வுரு​வப் படத்​துக்கு முதல்​வர் விஜய் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், சபா​நாயகர் ஜே.சி.டி. பிர​பாகர், அமைச்​சர்​கள் என். ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, டாக்​டர் கோ.க. அருண்​ராஜ், கே.ஏ. செங்​கோட்​டையன், ப. வெங்​கடரமணன், ராஜ்மோகன், ஏ.எம். ஷாஜ​கான், நெ. மரிய வில்​சன், முனை​வர் ரா. குமார், மாநிலங்​களவை உறுப்​பினர் பிர​வீன் சக்​கர​வர்த்​தி, சட்​டமன்ற உறுப்​பினர்​கள் மற்​றும் அரசு உயர் அதி​காரி​கள் திரளாகப் பங்​கேற்​றனர்.

திமுக சார்​பில், அண்​ணா​சாலை​யில் உள்ள அவரது சிலைக்கு அக்​கட்​சி​யின் தென்​சென்னை கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் சேகர் பாபு​வும், அதி​முக சார்​பில், முன்​னாள் அமைச்​சர்​கள் ஜெயக்​கு​மார், கோகுல இந்​திராவும், பாஜக சார்​பில் மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, தமாகா தலை​வர் ஜி.கே. வாசன், நடிகர் சரத்​கு​மார் உள்​ளிட்ட பலரும் அஞ்​சலி செலுத்​தினர்.தமிழக காங்​கிரஸ் சார்​பில், சத்​தி​யமூர்த்​திபவனில் 124 கிலோ எடை​யுள்ள பிர​மாண்ட கேக் வெட்​டப்​பட்​டது.

இதே​போல், முக்​கிய தலை​வர்​கள் வெளி​யிட்​டுள்ள புகழஞ்​சலி​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: பிரதமர் மோடி: நாட்​டைக் கட்​டமைக்​கத் தமது வாழ்​வையே அர்ப்​பணித்த இந்​திய சுதந்​திரப் போராட்​டத்​தின் முக்​கி​யத் தலை​வ​ரான காம​ராஜரை நினை​வு​கூர்​கிறேன். எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி: விளிம்​புநிலை மக்​களின் முன்​னேற்​றத்​திற்​காக​வும், சமூக நீதி, கொண்ட பொதுச்​சேவைக்​காக​வும் வாழ்ந்த தொலைநோக்​குப் பார்வை கொண்ட தலை​வர்.

ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர்: காம​ராஜரின் முன்​னோடி திட்​ட​மான மதிய உணவுத் திட்​டம் லட்​சக்​கணக்​கான குழந்​தைகளைப் பள்​ளிக்​குக் கொண்டு வந்து சமூக சமத்​து​வத்​திற்கு வலு​வான அடித்​தளம் அமைத்​தது.

முதல்​வர் விஜய்: வறுமை​யால் வாடிய ஏழைக் குழந்​தைகளின் பசி​யைப் போக்க மதிய உணவுத் திட்​டம் தந்த மாமேதை​யின் தியாகத்​தை​யும், சாதனை​களை​யும் போற்றி எனது கல்வி வணக்​கத்​தைச் செலுத்​துகிறேன்.

திமுக தலை​வர் மு.க. ஸ்டா​லின்: கல்​வி, தொழில், வேளாண் வளர்ச்​சிக்கு வலு​வான அடித்​தளம் அமைத்​தவர்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தின் கல்விக்கண் திறந்த கர்​மவீரர், அணை​கள் பல தந்து வேளாண்மை செழிக்க வித்திட்​ட​வர். இதே​போல், வி த லீடர்ஸ் நிறு​வனர் அண்​ணா​மலை, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி தினகரன், பாமக தலை​வர் அன்​புமணி ஆகியோ​ரும் புகழஞ்​சலி செலுத்​தி​யுள்​ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version