ஆந்திராவை நோக்கி நகரும் அக்வான் புயல்: மக்கள் பாதுகாப்பாக இருக்க உள்துறை அமைச்சர் அனிதா எச்சரிக்கை

0
29

வங்க கடலில் ஏற்​பட்​டுள்ள ‘அக்வான்’ புயல் ஆந்திராவை நோக்கி மணிக்கு 6 கி.மீ வேகத்​தில் தீவிர சூறாவளி காற்​றுடன் நகர்ந்து வரு​கிறது. இதன் தாக்​கத்​தால் ஆந்​திராவின் விஜயநகரம், விசாகப்​பட்​டினம், ஸ்ரீகாகுளம், காக்​கிநாடா, குண்​டூர், பிரகாசம், கிருஷ்ணா, என்.டி.ஆர், நெல்​லூர் மாவட்​டங்​களில் கடல் சீற்​றமாக காணப்​படு​கிறது.

அக்​வான் புயல் நாளை (20-ம் தேதி) ஆந்​திராவின் நர்​சாபூர்-ஒடிசாவின் பூரி இடையே கரையை கடக்க கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனையொட்டி, நேற்று சம்​மந்​தப்​பட்ட மாவட்ட ஆட்சி​யர்​கள், அதி​காரி​களு​டன் ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா காணொளி மூலம் ஆலோ​சனை நடத்​தினார். அப்​போது அவர் பேசும்​போது, “20-ம் தேதி மதி​யம் அக்​வான் புயல் கரையை கடக்​கும் என வானிலை இலாகா தெரி​வித்​துள்​ளது. அக்​வான் புயல் கரையை கடக்​கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்​தில் புயல் காற்று வீசும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மேலும் சூறாவளி காற்​றுடன் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், வெள்ளி, சனிக்​கிழமை​களில் மக்​கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்​டாம் என கேட்​டுக்​கொள்​கிறோம். அவசர உதவிக்கு 13 மத்​திய பேரிடர் மீட்​புக்​குழு​வும், 11 மாநில பேரிடர் மீட்பு குழு​வும் தயார் நிலை​யில் உள்​ளன. இவை தவிர தயார் நிலை​யில் தீயணைப்பு படை, மின் வாரிய ஊழியர்​களும் உள்​ளனர். தாழ்​வான பகுதி​யில் வசிக்​கும் மக்​கள் அனைவரும் முகாம்​களில் தங்க வேண்​டும். அவர்​களுக்கு தேவை​யான அனைத்து வசதி​களை​யும் அரசு அதி​காரி​கள் செய்​துள்​ளனர்” என்றார்.

கடலோர ஆந்​திரா, வடக்கு ஆந்​திர பகுதி​யில் அக்​வான் புயலையொட்டி இன்​றும், நாளை​யும் பலத்த மழை பெய்​யும் என விசாகப்​பட்​டினம் வானிலை இலாகா எச்​சரித்​துள்​ளது. கடலோர ஆந்​திர பகுதி​யில் மீனவர்​கள் மீன் பிடிக்க செல்ல வேண்​டா​மென கேட்​டுக்​கொள்​ளப்​பட்​டுள்​ளனர். அதி​கார பூர்​வ​மான எச்சரிக்கைகளை மட்​டுமே மக்​கள் நம்ப வேண்​டும் என்​றும், சமூக வலைத்​தளங்​களில் பரவும் புரளி​களை யாரும் நம்ப வேண்டாம் என்​றும் ஆந்​திர அரசு எச்​சரித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here