Home உலக செய்திகள் நேபாள எல்லைப் பகுதியில் 4-வது நாளாக ஊரடங்கு: பிரதமர் பாலேந்திர ஷா அவசர ஆலோசனை

நேபாள எல்லைப் பகுதியில் 4-வது நாளாக ஊரடங்கு: பிரதமர் பாலேந்திர ஷா அவசர ஆலோசனை

0

 நேபாளத்​தின் கோஷி மாகாணம், சுன்​சரி மாவட்டம் இந்​திய எல்​லையை ஒட்​டி​ அமைந்​துள்​ளது. அங்கு இரு மதத்​தினரின் பண்​டிகை கொண்​டாட்​டங்​களின் போது திடீரென தகராறு ஏற்​பட்​டது.

இது வன்​முறை​யாக மாறியது.நில​வரத்​தைக் கட்​டுப்​படுத்த காவல்​ துறை​யினர் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதில் ஒரு​வர் உயிரிழந்​தார். மேலும், பாது​காப்​புப் படை​யினர் உட்பட 10-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இதைத் தொடர்ந்​து, கடந்த திங்​கள்​கிழமை அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. நேற்று 4-வது நாளாக இந்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்​தது. நில​வரத்​தைக் கட்டுப்படுத்த, கிழக்​கு-மேற்கு நெடுஞ்​சாலை உள்​ளிட்ட 10 பதற்றம் நிறைந்த பகு​தி​களில் ஊரடங்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மக்​கள் நடமாட்​டம், பொதுக்​கூட்​டங்​கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது பதற்றமான இடங்​கள் மற்​றும் அரசு அலு​வல​கங்​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. நிலைமை படிப்​படி​யாகச் சீரடைந்து வரு​வ​தாக சுன்​சரி உதவி மாவட்ட தலைமை அதி​காரி போஷன் லமிச்​சானே தெரி​வித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், நாட்​டின் ஒட்​டுமொத்​தப் பாது​காப்பு மற்​றும் சுன்சரி மாவட்ட நில​வரம் குறித்து ஆலோ​சிக்​க பிரதமர் பாலேந்திர ஷா நேற்று தேசிய பாது​காப்பு கவுன்​சில் கூட்​டத்​தைக் கூட்​டி​னார். மறு உத்​தரவு வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்​கும் என மாவட்​ட நிர்​வாகம்​ அறி​வித்​துள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version