Home விளையாட்டு செய்திகள் IPL 2026 சீசனில் ‘சிஎஸ்கே’ விளையாடும் முழு அட்டவணை: ஏப்.23-ல் மும்பை உடன் பலப்பரீட்சை

IPL 2026 சீசனில் ‘சிஎஸ்கே’ விளையாடும் முழு அட்டவணை: ஏப்.23-ல் மும்பை உடன் பலப்பரீட்சை

0

நடப்பு ஐபிஎல் சீசன் நாளை (மார்ச் 28) தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் முழு ஆட்ட அட்டவணை குறித்து பார்ப்போம்.

இந்த சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இளம் வீரர்களுடன் இணைந்து அனுபவமிக்க வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக இந்த முறை களம் காண உள்ளனர்.

சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல், கார்த்திக் சர்மா, தோனி, மேத்யூ ஷார்ட், நூர் அகமது, கலீல் அகமது, ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆடும் லெவனில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதி. இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் லீக் போட்டி அட்டவணை:

>மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் – குவஹாட்டி

>ஏப்.3 – பஞ்சாப் கிங்ஸ் – சென்னை

>ஏப்.5 – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – பெங்களூரு

>ஏப்.11 – டெல்லி கேபிடல்ஸ் – சென்னை

>ஏப்.14 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை

>ஏப்.18 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஹைதராபாத்

>ஏப்.23 – மும்பை இந்தியன்ஸ் – மும்பை

>ஏப்.26 – குஜராத் டைட்டன்ஸ் – அகமதாபாத்

>மே 2 – மும்பை இந்தியன்ஸ் – சென்னை

>மே 5 – டெல்லி கேபிடல்ஸ் – டெல்லி

>மே 10 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை

>மே 15 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – லக்னோ

>மே 18 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை

>மே 21 – குஜராத் டைட்டன்ஸ் – சென்னை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version