Home கன்னியாகுமரி செய்திகள் தம்பதி இறப்பு: அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை

தம்பதி இறப்பு: அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை

0

திங்கள்சந்தை அருகே உள்ள சேங்கரவிளை  பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (60). அவர் மனைவி ராஜம் (52). இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நெய்யூர் வடக்கு தெரு பகுதியில் செல்லும் போது, எதிரே அழகிய மண்டபத்திலிருந்து குளச்சல் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மற்றொரு கார் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்  சென்ற தம்பதி செல்வராஜ், ராஜம் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு பஸ் டிரைவர் ராபர்ட் சிங் என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து,   இந்த வழக்கு இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அமர்தீன் நேற்று (செப்.,2) தீர்ப்பு வழங்கினார். அதில் அரசு பஸ் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவர் ராபர்ட் சிங்கிற்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 21 ஆயிரம்  அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ரேவதி வாதாடினார். தொடர்ந்து ராபர்ட் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version