Home கன்னியாகுமரி செய்திகள் அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம்: முதல்வருக்கு எம்எல்ஏ கோரிக்கை

அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம்: முதல்வருக்கு எம்எல்ஏ கோரிக்கை

0
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் தடையின்றி ஊதியம் வழங்கக் கோரி குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கி, மாதந்தோறும் தடையின்றி சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீராக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு, கடந்த 2025 ஜனவரி முதல் அரசு ஊதியம் வழங்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதாந்திர ஊதியம், சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்களால் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு,

அந்தந்த பள்ளிகளின் ஆசிரியா்கள் இணைந்து குறைந்த ஊதியம் வழங்கி வருகின்றனா். எனவே, உரிய வழிகாட்டல்களை வழங்கிஅரசு பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு மாதாந்திர ஊதியம் தடையின்றி கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version