கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 25-வது வார்டில் உள்ள மீனாட்சி கார்டன் மேற்கு தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் ஓடை பணி இன்று தொடங்கப்பட்டது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர் காந்தி இந்த பணியை தொடங்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் அக்ஷயா கண்ணன், பாஜக மாவட்ட அயலக தமிழர் பிரிவு இணை அமைப்பாளர் ஜாக்சன் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.














