காப்புக்காடு, தொல்காப்பியர் சிலை வளாகத்தில் நேற்று 28-ம் தேதி தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில், தொல்காப்பியர் மற்றும் தொல்காப்பியம் குறித்து மாஸ்தரன் சிங் சிறப்புரை ஆற்றினார். துணைத் தலைவர்கள் சிந்துகுமார், சுரேஷ், குமரி முத்தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், எழுத்தாளர் அரிகிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.