புதுக்கடை அருகே உள்ள காப்புகாட்டில் தொல்காப்பியர் கழக 33ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் காப்புகாட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் தங்கம் தமிழ் தாய் வாழ்த்து பாடுகிறார். தொடர்ந்து ஒளிவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தொல்காப்பியரும் தொல்காப்பியமும் என்ற பொருளில் கவியரங்கம் நடக்கிறது. 2.45 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தொல்காப்பியர் கழக தலைவர் பேராசிரியர் முழங்குழி பா. லாசர் தலைமை வகிக்கிறார். பிற்பகல் 4 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நற்பணிச் செம்மல் பா. வின்சென்ட் தலைமை வகிக்கிறார். பிரபல தொழிலதிபர் பி.கே. சிந்துகுமார் அனைவருக்கும் விருதுகளை வழங்குகிறார்.