எப்ஸ்டீன் தொடர்புக்காக ஹர்தீப் பூரி பதவி விலக வலியுறுத்தி காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

0
20

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 12-ம் நாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு தொடர்பு இருந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறி இருந்த நிலையில், இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரை சேர்ந்த பிரபல தொழில​திபர் ஜெப்ரி எப்​ஸ்​டீன். புளோரிடா மாகாணம், பாம் பீச் பகு​தி​யில் இருந்த அவருக்குச் சொந்தமான பண்ணை வீடு​களில் சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக கடந்த 2005-ம் ஆண்​டில் புகார்​கள் எழுந்​தன.

இதுதொடர்​பான வழக்​கில் ஜெஃப்ரிக்கு 13 மாதங்​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. சிறை​யில் இருந்து அவர் வெளியே வந்த பிறகும் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்​கில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை​யில் அவர் மீண்​டும் கைது செய்​யப்​பட்​டார். கடந்த 2019 ஆகஸ்ட் 10-ம் தேதி மான்​ஹாட்​டன் சிறை​யில் அவர் தற்​கொலை செய்து கொண்​டார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்​வேறு உலக நாடு​களின் தலை​வர்​கள், அமெரிக்​கா​வின் முன்​னணி தொழில​திபர்​களுக்கு எப்​ஸ்​டீனுடன் நெருங்​கிய தொடர்பு இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இவை தொடர்​பான ஆவணங்​கள், புகைப்​படங்​கள், வீடியோக்​கள் வெளி​யாகி அதிர்​வலைகளை ஏற்​படுத்தி வரு​கின்​றன.

இந்நிலையில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக ராகுல் காந்தி நேற்று குற்றம் சாட்டியிருந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘எப்ஸ்டீன் கோப்புகளில் ஹர்தீப் சிங் பூரி, அனில் அம்பானி ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இது தொடர்பாக என்னிடம் உள்ள தரவுகளை நான் அங்கீகரிக்கிறேன்’’ என தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “நான் சர்வதேச அமைதி நிறுவனத்தில் பணியாற்றியபோது, அதன் தலைவர் டெர்ஜே ரோட்-லார்சன் மூலம் எப்ஸ்டீனை சந்தித்தேன். ஒட்டுமொத்தமாக 3 அல்லது அதிகபட்சம் 4 முறை மட்டுமே அவரைச் சந்தித்துள்ளேன். அதுவும் ஒரு தூதுக்குழுவின் ஒரு பகுதியாகவே அந்த சந்திப்புகள் நடைபெற்றன. அவரது குற்றச் செயல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் கோமாளித்தனத்தின் உச்சம். அவரது கருத்துக்கள் பொழுதுபோக்கு அம்சங்களைப் போன்றவை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அவரது வாடிக்கை. நமது நாட்டில் இரு வகையான தலைவர்கள் இருக்கிறார்கள். நாட்டை முன்னேற்றுவதற்காக 24 மணி நேரமும் உழைக்கக்கூடிய தலைவர்களும் இருக்கிறார்கள்; கோமாளித்தனமான தலைவர்களும் இருக்கிறார்கள்’’ என்று கூறினார்.

எப்ஸ்டீன் தன்னைப் பற்றி குறிப்பிட்டிருந்த ஒரு மின்னஞ்சலை சுட்டிக்காட்டிய அவர், ராகுல் காந்தி அந்த மின்னஞ்சல்களை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here