கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்ல இருக்கும் 20 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு அமைச்சுப் பணியாளர் ஆகியோருடனும் அவர்களது குடும்பத்துடனும் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று (மே 30) எஸ்பி அலுவலகத்தில் கலந்துரையாடினார். மேலும் சிறப்பாக பணியாற்றியதாக சால்வை அணிவித்து எஸ்பி பாராட்டினார்.














