காமேனி மரணத்துக்கு வாழ்த்து: உருவப்படத்தை எரித்த பெண் கருத்து

0
12

ஈரானில் அரசுக்கு எதி​ராக கருத்து தெரிவித்​த​தால் கைது செய்யப்​பட்ட ஒரு இளம்பெண் (மோர்​டிசியா ஆடம்​ஸ்) சித்ரவதைக்கு ஆளாகி, கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

க​ன​டா​வில் வசிக்​கும் அந்த இளம்​பெண், கடந்த ஜனவரியில் ஈரான் தலைவர் காமேனிக்கு எதி​ராக கனடாவில் நடந்த பேரணியில் பங்​கேற்ற வீடியோவை நேற்று எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​துள்​ளார்.

அத்துடன், ‘‘உன் (காமேனி) கல்​லறை​யின் மேல் நாங்​கள் நடன​மாடு​வோம் என்று நான் சொன்​னேன் அல்​ல​வா?’’ என எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டு உள்​ளார்.

மற்​றொரு பதி​வில், “மூஷ் அலி​யின் (காமேனி) பரி​தாபகர​மான மரணத்​துக்கு வாழ்த்​துகள்” என்று அவர் பதி​விட்​டுள்​ளார்.

கனடா​வில் நடந்த போராட்​டத்​தின்​போது, காமேனி​யின் உரு​வப்​படத்தை எரித்​து, அதிலிருந்து தனது சிகரெட்​டைப் பற்​ற​வைத்த வீடியோ வைரலானதன் மூலம் ஆடம்ஸ் உலகள​வில் அறியப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here