கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட குரூஸ் காலனியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நேற்று மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 8வது வார்டுக்குட்பட்ட வாத்தியார்விளை கைலாஷ் கார்டன் 1வது குறுக்குத் தெருவில் ரூ.5 லட்சம் செலவில் அலங்கார தரைக்கற்கள் சீரமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் மாநகர உதவி செயற்பொறியாளர் ரகுராமன், இளநிலைப் பொறியாளர்கள் தேவி; ராஜா உள்பட கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.