தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் உள்ள ‘கலைமகள் சபா’ சொத்து ஏலத்தை கண்காணிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம்

0
10

கலைமகள் சபாவுக்கு சொந்​த​மாக தமிழகம் உள்​ளிட்ட 5 மாநிலங்​களில் உள்ள சொத்​துகளின் ஏலத்தை கண்காணிக்க முன்​னாள் நீதிபதி எஸ்​.எஸ்​.சுந்​தர் தலை​மை​யில் ஒருநபர் ஆணை​யம் அமைத்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

நாமக்​கல் மாவட்​டம் குமார​பாளை​யத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு இயங்​கிய ‘கலைமகள் சபா’ நிதி நிறு​வனம் 5.33 லட்​சம் உறுப்​பினர்​களிடம் பெற்ற முதலீடு மூல​மாக தமிழகம், ஆந்​தி​ரா, கேரளா உள்​ளிட்ட மாநிலங்​களில் சுமார் 13,500 ஏக்​கர் நிலங்​களை வாங்கி ரியல் எஸ்​டேட் தொழிலில் ஈடு​பட்​டது.

இந்த நிறு​வனத்​துக்கு எதி​ராக முறை​கேடு புகார்​கள் வந்​ததை அடுத்​து, இதை நிர்​வகிக்க பதிவுத் துறை உதவி தலை​மைப் பதி​வாளர் அந்​தஸ்​துக்கு குறை​யாத அதி​காரியை நியமிக்க உயர் நீதி​மன்​றம் கடந்த 2021-ல் உத்​தர​விட்​டது.

அதன்​படி 4 அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டும், முன்​னேற்​றம் இல்​லாத​தால் கோவையை சேர்ந்த கருப்​பண்​ணன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.

‘தமிழகம் மட்​டுமின்றி அண்டை மாநிலங்​களி​லும் கலைமகள் சபா​வின் சொத்​துகள் உள்​ள​தால், தமிழக அரசு அதி​காரி​களுக்கு பதிலாக உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிப​தியை நியமித்​து, முதலீட்​டாளர்​களுக்​கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி​யிருந்தார்.

இந்​நிலை​யில், நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், என்​.செந்​தில் ​கு​மார் அடங்​கிய சிறப்பு அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மேல்​முறையீட்டு மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் வி.ஆர்​.கமல​நாதன், பி.சின்​னத்​துரை, ஆர்​.எஸ்​. செல்​வம் ஆகியோ​ரும், தமிழக அரசுத் தரப்​பில் தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், மூத்த வழக்​கறிஞர் ஆர்​.சிங்​கார​வேலன், வழக்​கறிஞர்​கள் ஜி.மோக​னகிருஷ் ணன், நர்​மதா சம்​பத் உள்​ளிட்​டோரும் ஆஜராகி வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் தமது உத்​தர​வில் கூறிய​தாவது: தமிழகம் உள்​ளிட்ட 5 மாநிலங்​களில் உள்ள சொத்துகளை​யும் மதிப்​பிட வேண்​டி ​உள்​ளது. ஆக்​கிரமிப்​பில் உள்ள சொத்​துகளை அகற்​ற​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டி​யுள்​ளது.

கலைமகள் சபா​வின் அனைத்து சொத்​துகளை​யும் சரி​பார்த்​து, மின்​னணு முறை​யில் பொது ஏலம் விட்​டு, உறுப்​பினர்​களுக்கு சேர வேண்​டிய தொகையை வழங்க ஏது​வாக உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி எஸ்​.எஸ்​.சுந்​தர் தலை​மை​ யில் ஒருநபர் ஆணை​யம் அமைக்​கப்​படு​கிறது. அவருக்கு உறு​துணை​யாக வழக்​கறிஞர்​கள் எம்​.எழிலரசி, என்​.பிரேமலதா ஆகியோர் நியமிக்​கப்​படு​கின்​றனர்.

அனைத்து உறுப்​பினர்​களின் விவரங்​களை​யும் முறை​யாக இணை​யத்​தில் பதிவு செய்​வதற்​​கான நடவடிக்​கைகளை​யும் இந்த ஆணை​யம் மேற்​​பார்​வை​யிட வேண்​டும். இவ்​​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வி்ட்​டுள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here