Home கன்னியாகுமரி செய்திகள் பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

0
திருவட்டாறு அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
திருவட்டாறு அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

திருவட்டாறு அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகே செவரக்கோடு, வெட்டுக்காட்டுவிளையைச் சோ்ந்த கமலதாஸ் மனைவி சசிகலா (47). இவா் வோ்க்கிளம்பி அருகே விராலிக்காட்டுவிளையில் உள்ள முந்திரி ஆலைக்கு செப். 30ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஆற்றூா், கல்லுப் பாலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வினோ (18), ஆற்றூரில் இருந்து செவரக்கோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனம் சசிகலா மீது மோதியுள்ளது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

சசிகலா மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோ ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, வினோவின் உடலைக் கைபற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version