நாகர்கோவிலில் உள்ள இளங்கடை ரேஷன் கடையை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று திடீரென ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார். ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை மற்றும் விரல் ரேகை பதிவு செய்யும் முறையையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.