பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைத் தவிர்க்கும் நோக்கில், நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 52 வார்டுகளிலும் 100 வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பழைய பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் மூலம், பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.











