கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி மாநாடு நேற்று கூட்டாலுமூட்டில் நடைபெற்றது. இதில் தொகுதி இணை அமைப்பாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சுடர்சிங், மாவட்ட துணைதலைவர் மில்ற்றா செல்லத்துரை, மாவட்ட செயலாளர் ராதிகா முருகன், கன்னியாகுமாரி கிழக்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உள்ளாட்சி பிரதிநிதிகள், பாஜக அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.














