Home கன்னியாகுமரி செய்திகள் பறக்கை அருகே காதல் விவகாரத்தில் மோதல்: இளைஞர் மீது அரிவாள் தாக்குதல்; கொலை முயற்சி வழக்கில்...

பறக்கை அருகே காதல் விவகாரத்தில் மோதல்: இளைஞர் மீது அரிவாள் தாக்குதல்; கொலை முயற்சி வழக்கில் தம்பதியினர் கைது.

0
பறக்கை அருகே இளைஞரை காரில் மோதி அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படும் தம்பதியினர் கைது
பறக்கை அருகே காதல் விவகாரத்தில் மோதல்: இளைஞர் மீது அரிவாள் தாக்குதல்; கொலை முயற்சி வழக்கில் தம்பதியினர் கைது.

தெங்கம்புதூர் அருகே தெற்குபுத்தளத்தைச் சேர்ந்த கொத்தனார் விவேக் (27), மேலப்புல்லுவிளையைச் சேர்ந்த தங்கமலரை (26) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் தங்கமலருக்கும் கப்பல் ஊழியர் திவேக்குக்கும் (28) திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரையும் விவேக் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலப்புல்லுவிளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற விவேக்கை காரில் பின்தொடர்ந்து, பறக்கை அருகே மோதி அரிவாளால் தாக்கியதாகப் கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த விவேக் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விவேக்கின் தாயார் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தங்கமலர், திவேக் ஆகியோரைக் கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version