Home கன்னியாகுமரி செய்திகள் நெல்லை, குமரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வருகை

நெல்லை, குமரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வருகை

0

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லைக்குச் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார். நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பின்னர் கன்னியாகுமரிக்குச் சென்று அங்கு சனிக்கிழமை காலை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்குச் சென்று அங்குள்ள பொதுக்கூட்டத்தில் தி.மு.க., ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version